வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ரத்தினம் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி

கோவை : வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ரத்தினம் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.


கோவை : வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ரத்தினம் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

இரத்தினவானி 90.8 சமுதாய வானொலியில் இந்திய தேர்தல் ஆணையம் உதவியோடு, ஸ்மார்ட் அமைப்புடன் இணைந்து தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள், ஓட்டு போடுதலின் அவசியம், மற்றும் ஓட்டு உரிமை குறித்த விழிப்புணர்வு தகவல்கள் இடம்பெற்று உள்ளது. இதன் ஒருபகுதியாக, இன்று ரத்தினம் கல்லூரியில் இருந்து சிட்கோ வரை தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் ரத்தினம் கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மதுக்கரை வட்டாச்சியர் பழனிசாயும், ரத்தினம் கல்லூரி முதன்மை கல்வி அதிகாரி மாணிக்கமும் சேர்ந்து துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மதுக்கரை வட்டாச்சியர் பழனிசாமி, மாணவர்களுக்கு ஓட்டு உரிமை மற்றும் ஓட்டு போடுவதன் அவசியத்தை கூறினார். மேலும், ஓட்டுபோடுவதற்கு பரிசு வாங்குவது சட்டப்படி குற்றம் என்றும் அதை ஆதரிக்கக் கூடாது என்றும் மாணவர்களுக்கு விளக்கி கூறினார். 

பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் இலவச தொலைபேசி எண் 1950 பயன்பாடு, தேர்தல் ஆணையத்தின் மொபைல் அப்பிளிகேஷன்களான cVIGIL app மற்றும் Voters Helpline App குறித்த விவரங்களை துண்டு பிரசுரங்கள் ஆக பொதுமக்கள் இடத்தில் வழங்கினர். மேலும், ஓட்டு போட லீவு வேண்டும் என்ற வாசகம் இடம்பெற்ற துண்டு பிரசுரங்களை தேர்தல் நாளில் ஊதியத்துடன் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிப்பதை வலியறுத்தி கொசிமா (Coimbatore SIDCO Industrial Estate Manufacturers Welfare Association) அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...