கோவையில் நள்ளிரவிலும் தொடரும் சட்டக்கல்லூரி மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டம்

கோவை : பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குப்பதிவை ரத்து செய்யக் கோரி கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டு வரும் உள்ளிருப்பு போராட்டம் நள்ளிரவிலும் தொடர்கிறது.


கோவை : பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குப்பதிவை ரத்து செய்யக் கோரி கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டு வரும் உள்ளிருப்பு போராட்டம் நள்ளிரவிலும் தொடர்கிறது.

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள், வழக்கறிஞர்கள் அனைத்து கட்சி அமைப்பினர் என பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, கோவை மாவட்டத்தில் போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதேபோல, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் வழக்குப்பதிவு ஆனவர்கள் யாரும் தேர்வு எழுத முடியாது என சட்டக் கல்லூரி முதல்வர் அறிக்கை வெளியிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.



இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, தற்போது சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 167 பேர் மீதான வழக்கை உடனடியாக ரத்து செய்யக் கோரியும், ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் கல்லூரி முதல்வரைக் கண்டித்தும் மாணவர்கள் கோஷங்களை எழுப்பி வந்தனர். 

மாணவர்களின் இந்தப் போராட்டத்தால், வழக்குப்பதிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தேர்வு எழுத எந்தவிதமான தடையும் இல்லை என கோவை அரசு சட்டக்கல்லூரி இன்று விளக்கமளித்தது. இதனால், போராட்டத்தை மாணவர்கள் முடித்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், மூன்று அம்ச கோரிக்கைகள் நிறைவேறும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என மாணவர்கள் நள்ளிரவிலும் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அதாவது, பெண்களின் பெயர்களை வெளியிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது துறை ரீதியாகவும், சட்டப்படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கக் கோரி போராடிய மாணவர்கள் மீது பதிவு செய்த வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், அதேபோல, 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் கல்லூரி முதல்வர் ஒரு சார்பாக செயல்படுவதால், அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நள்ளிரவிலும் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

Newsletter

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...