கோவை : தொண்டாமுத்தூர் பகுதியில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 5.50 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.

கோவை - வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலை லட்சுமி நகர் பகுதியில் அதிகாரி ராஜேஸ்வரி தலைமையில் பறக்கும் படையினர் இன்று சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, சி.எம்.எஸ் இன்போ சிஸ்டம் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த வாகனத்தை ஓட்டி வந்த சந்தோஷ் என்பவரிடம் இருந்து, உரிய ஆவணங்கள் இல்லாத சுமார் ரூ. 5.50 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்தப் பணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்டு, அங்கு தனி துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு கருவூலத்தில் வைக்கப்பட்டது.
பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது, மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சி.எம்.எஸ் இன்போ சிஸ்டம் என்ற தனியார் நிறுவனம், வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை பெற்று அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தேர்தல் விதிகள் நடைமுறையில் இருப்பதால், முறையான ஆவணங்களை சமர்ப்பித்து, இந்தப் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.