திருப்பூர் தொகுதியின் முதல் வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தார் தமிழ்நாடு கள் இயக்கம் வேட்பாளர் கதிரேசன்

திருப்பூர் : திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் முதல் வேட்பாளராக, தமிழ்நாடு கள் இயக்கத்தின் வேட்பாளர் கதிரேசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருப்பூர் : திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் முதல் வேட்பாளராக, தமிழ்நாடு கள் இயக்கத்தின் வேட்பாளர் கதிரேசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.



தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கியது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வடக்கு வருவாய் துறை அலுவலகத்தில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் போட்டியிடும் கதிரேசன், திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களிடம் இருந்து துணிகளைப் பெற்று தைத்து தந்து வருகிறார். 

வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் கதிரேசன் பேசுகையில், "எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவது, விவசாய ஆணையத்தின் பரிந்துரையை நடைமுறைப்படுத்துதல், உணவுப் பொருளாக அங்கீகரித்தல், காவிரி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொள்கை ரீதியாக போட்டியிடுகிறேன். தமிழகத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே கள் இயக்கம் போட்டியிடுகிறது. அனைத்து மாநில மாவட்ட மக்கள் திருப்பூரில் ஒருங்கிணைந்து உள்ளதால் திருப்பூரை தேர்வு செய்துள்ளது," என்றார். 

Newsletter

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...