சவுரிபாளையம் அருகே ஓய்வு பெற்ற செவிலியர் கழுத்தறுத்து கொலை : கொலையாளிகளுக்கு வலைவீச்சு

கோவை : சவுரிபாளையம் பகுதியில் ஓய்வு பெற்ற செவிலியரை நகைக்காக கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : சவுரிபாளையம் பகுதியில் ஓய்வு பெற்ற செவிலியரை நகைக்காக கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சவுரிபாளையம் பகுதியில் உள்ள வேளாங்கண்ணி நகரைச் சேர்ந்த விஜய் ஆனந்தனின் மனைவி மேரி ஏஞ்சலின் (70). இவர் சென்னை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து ஓய்வுப் பெற்று, கோவையில் தனது கணவருடன் வசித்து வருகிறார். 

இந்த நிலையில், மேலும், இவரது வீட்டு அருகே காலியாக இருக்கும் மற்றொரு வீட்டை வாடகைக்கு கேட்டு நேற்று இரவு சுமார் 9 மணியளவில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் முதியவர் மேரி ஏஞ்சலினை அணுகியுள்ளார். இதையடுத்து, அந்தப் பெண்ணை அவர் காலியான வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மேரி வீடு திரும்பாததால், கணவர் விஜய் ஆனந்தன் அவரைத் தேடிச் சென்று பார்க்கும் போது, அந்த வீட்டின் உள்ளே மேரியின் குரல்வளை அறுபட்ட நிலையில் கிடந்துள்ளார். அவர் அணிந்திருந்த சுமார் 5 பவுன் தாலிச் செயின், கம்மல்கள், செல்போன் ஆகியவையும் காணவில்லை. 

இதையடுத்து, அதிர்ச்சி அடைந்த கணவர் விஜயின் கதறல் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடினர். பின்னர், தகவலறிந்து வந்த பீளமேடு போலீசார், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் சேர்ந்து வந்து வீடு வாடகைக்கு வேண்டும் என்று கேட்டு சென்றுள்ளனர். இவர்கள்தான் இந்த கொலைக்கு காரணமானவர்கள் என்ற கோணத்தில் போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...