கோவை : பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிக்கையின் ஆசிரியர் கோபாலை வரும் 25ம் தேதி நேரில் ஆஜராக கோவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
கோவை : பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிக்கையின் ஆசிரியர் கோபாலை வரும் 25ம் தேதி நேரில் ஆஜராக கோவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை காவல் ஆணையரிடம் கடந்த 11-ம் தேதி பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக அமைச்சர்கள், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகளை பரப்பியவர்கள் மீது நடவடிக்க எடுக்க வேண்டும் என அ.தி.மு.க.வின் தொழில்நுட்பப் பிரிவின் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் புகார் அளித்திருந்தார்.
இதேபோல, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும், தேர்தல் நேரத்தில் நான் சார்ந்திருக்கும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தவும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தூண்டுதலின் பேரில், உண்மைக்கு மாறான செய்தியை திட்டமிட்டு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில், இந்தப் புகார்கள் தொடர்பாக நக்கீரன் பத்திரிக்கையின் ஆசிரியர் கோபாலை, சைபர் கிரைம் போலீசார் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்துக் கொண்டிருக்கும் போது, இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத சென்னையில், விசாரணைக்கு அழைப்பது சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது என நக்கீரன் பத்திரிக்கையின் வழக்கறிஞர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் 25ம் தேதி நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபாலை, கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.