மக்கள் நீதி மய்யத்தின் கடலூர், நாகை பொறுப்பாளர் சி. குமாரவேலின் ராஜினாமா ஏற்பு

கோவை : மக்கள் நீதி மய்யத்தின் கடலூர், நாகை பொறுப்பாளர் சி.கே.குமாரவேலின் ராஜினாமா கடிதத்தை அக்கட்சியின் தலைமை ஏற்றுக் கொண்டது.

கோவை : மக்கள் நீதி மய்யத்தின் கடலூர், நாகை பொறுப்பாளர் சி.கே.குமாரவேலின் ராஜினாமா கடிதத்தை அக்கட்சியின் தலைமை ஏற்றுக் கொண்டது. 

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல், கடந்த ஒருவார காலமாக நடைபெற்று வந்தது. அந்த நேர்காணல் முடிவு பெறாத வேளையில், அக்கட்சியின் கடலூர், நாகை பொறுப்பாளர் சி.கே. குமரவேல், தனது முகநூல் பக்கத்தில், கடலூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியிட்டிருந்தார். 

ஜனநாயக முறைப்படி, வேட்பாளர் விருப்பமனு பெறப்பட்டு, அவர்களுக்கு நேர்காணல் நடைபெற்று வரும் நிலையில், அதில் பங்கேற்காமல் சி.கே. குமரவேல், மக்கள் நீதி மய்யக் கட்சியின் கடலூர் வேட்பாளர் என தகவல் வெளியிட்டிருப்பது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் என மக்கள் நீதி மய்யத்தின் தலைமை தெரிவித்தது. 

இதையடுத்து, மக்கள் நீதி மய்யத்தின் கடலூர், நாகை பொறுப்பாளர் சி.கே.குமாரவேல், கட்சியிலிருந்து விலகுவதாகக் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அவரது ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் தகவல் அளித்துள்ளார். நேர்காணலுக்குக் கூட வராமல், தேர்தலில் தான் கடலூர் தொகுதியில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் என அவர் கூறியுள்ளார். மேலும், ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வு முறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது என விளக்கமளித்துள்ளார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...