வரும் ஏப்ரல் 03-ம் தேதி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கோவையில் தேர்தல் பிரச்சாரம்

கோவை : கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் வரும் 30-ம் தேதி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


கோவை : கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் வரும் ஏப்ரல் 03-ம் தேதி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 



வடகோவை பகுதியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க., வி.சி.க., கொ.ம.தே.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். 

இந்தக் கூட்டத்தில் இதில், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி பேசுகையில், "தொழில்துறை வீழ்ச்சி, பணமதிபிழப்பு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளானர். பா.ஜ.க.,விற்கு இது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அனைவரும் சிறப்பாக பணியாற்றி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்," என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பங்கேற்ற முன்னாள் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் பேசியதாவது :- நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வெற்றி தேடி தர வேண்டியது கூட்டணி கட்சிகளின் கடமை. மக்கள் சக்தி மூலம் பா.ஜ.க.,வையும் அ.தி.மு.க.,வையும் வீழ்த்த வேண்டும். நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். நீலகிரி, கோவை, பொள்ளாச்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்து, அதனை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலினிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் கூட்டணி கட்சிகளுக்கு ஏற்பட்டு உள்ளது, எனக் கூறினார்.

வி.சி.க.வின் இலக்கியன் பேசும்போது, குடியரசு தலைவரில் இருந்து பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள், மடாதிபதிகள் போல் செயல்பட்டு வருகின்றனர். நமது வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி, ஆனால் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கப் போகிறோம் என்பது தான் முக்கியம், என்றார்.

ம.தி.மு.க மாநகர் மாவட்ட செயலாளர் பேசுகையில்," வேட்பாளர்களை ஆதரித்து வரும் 30 நாட்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றி அடைய வேண்டும். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு இரண்டு நாட்கள் தேவைப்படும். மொத்தம் 12 நாட்கள் தேவை உள்ளது. அதற்கு ஏற்றது போல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். மேலும், பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. ஏனெனில், வெற்றி பெறுவதற்கு அனைத்து யுக்திகளையும் கையாளும் என்பதால், அனைவரும் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்," என்றார்.



இதையடுத்து, செய்தியாளர்களிடம் தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி கூறியதாவது :- வரும் ஏப்ரல் 03-ம் தேதி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கோவையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். மத்திய, மாநில ஆட்சிகள் அகற்றப்பட வேண்டும். பா.ஜ.க. கோவையில் போட்டியிட்டாலும், நிச்சயமாக வெற்றி பெற முடியாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வெற்றி பெறுவது உறுதி. தி.மு.க. கூட்டணி கொள்கை உள்ள கூட்டணி. அ.தி.மு.க. கூட்டணி என்பது முரண்பட்ட கூட்டணி. அ.தி.மு.க. கூட்டணியில் நேற்று வரை திட்டிக் கொண்டிருந்த கட்சிகள் ஒன்றாக சேர்ந்துள்ளன. மேலும், தி.மு.க. கூட்டணி இயற்கையாக அமைந்த கொள்கையுள்ள கூட்டணி. தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும், எனக் கூறினார். 

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...