மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க., தனது 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

வரும் ஏப்., 18-ம் தேதி நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க இடம்பெற்றுள்ளது. இந்தக் கட்சிக்கு, தர்மபுரி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஶ்ரீபெரும்புதூர் ஆகிய 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பா.ம.க. தலைமை கடந்த வாரம் வெளியிட்டது.
இந்த நிலையில், 2-கட்ட கட்டமாக எஞ்சிய 2 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஶ்ரீபெரும்புதூரில் அ.வைத்திலிங்கமும், திண்டுக்கல்லில் ஜோதிமுத்துவும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.