திருப்பூரில் அ.தி.மு.க. சார்பில் எம்.எஸ்.எம்.ஆனந்தன் போட்டி

திருப்பூர் : வரும் நாடாளுமன்ற தேர்தலில், திருப்பூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் எம்.எஸ்.எம். ஆனந்தன் போட்டியிடுகிறார்.

திருப்பூர் : வரும் நாடாளுமன்ற தேர்தலில், திருப்பூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் எம்.எஸ்.எம். ஆனந்தன் போட்டியிடுகிறார். 

வரும் ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதில், பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் அ.தி.மு.க., இந்த தேர்தலை சந்திக்கிறது. நீலகிரி, திருப்பூர் உள்பட 20 இடங்களில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க. தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. அதில், திருப்பூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் மற்றும் அ.ம.மு.க.வின் எஸ்.ஆர். செல்வம் ஆகியோரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் எம்.எஸ்.எம். ஆனந்தன் களமிறக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், திருப்பூர் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துளது.

எம்.எஸ்.எம்.ஆனந்தன் பற்றிய விபரம் :

1962-ம் ஆண்டு பிறந்த இவர், 1980-ல் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். கிளை கழக் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கை தொடங்கிய ஆனந்தன், நகர பனியன் சங்க செயலாளர், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்தார்.  2001 முதல் திருப்பூர் நகர கழக செயலாளராகவும், 2011 முதல் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக் செயலாளராகவும் இருந்த அவர், 2011ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னர், ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும், வனத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.   

பனியன் தொழிலுக்கு டையிங் பிரச்சனை வந்த போது, அதை முழு முயற்ச்சி எடுத்து தீர்வு கண்டார்.  தற்சமயம் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இவர் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த போது, பெருமுயற்சி எடுத்து கொண்டுவரப்பட்டது. தற்போது, பிரதமர் அடிக்கல் நாட்டிய ஈ.எஸ்.ஐ மருத்துவமனை இடத்தையும் இவர் தேர்வு செய்து கொடுத்தது தான் என்பது குறிப்பபிடத்தக்கது.

Newsletter

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...