கோவை : வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வரவேண்டும் என்பதை வலியுறுத்தி கோவையில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கோவை : வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வரவேண்டும் என்பதை வலியுறுத்தி கோவையில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலானதைத் தொடர்ந்து, பதற்றம் நிறைந்த பகுதிகளில் தேர்தல் அமைதியாக நடைபெறவும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவும் போலீஸ் அணிவகுப்புகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று காந்திபுரத்தில் இந்த கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியானது கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் டாக்டர் பாலாஜி சரவணன் தலைமையில் தொடங்கப்பட்டது. இந்த அணிவகுப்பில் இந்தோ - திபெத் பார்டர் ஃபோர்ஸினர் 50 பேரும், கோவை மாநகர காவல் துறையினர் 100 பேரும், சிறப்பு காவல்துறையினர் 20 பேரும் கலந்து கொண்டனர். இந்த அணி வகுப்பானது காந்திபுரத்திலிருந்து கிராஸ்கட் சாலை வழியாக சென்று சிவானந்தா காலனியில் நிறைவடைந்தது. அணிவகுப்பின் போது, போலீசார் சாலையெங்கும் துப்பாக்கி ஏந்தியபடி, பொதுமக்களுக்கு நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்று உணர்த்தும் வகையில் அணிவகுப்பை நடத்தினர்.