Breaking : பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளிடம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிபதிகள் விசாரணை

கோவை : சட்டம் ஒழங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு, பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளிடம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிபதிகள் விசாரணை நடத்துகின்றனர்.


கோவை : சட்டம் ஒழங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு, பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளிடம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிபதிகள் விசாரணை நடத்துகின்றனர். 

பொள்ளாச்சி கல்லூரி மாணவி பாலியல் வழக்கில் கைது செய்து சிறையில் வசந்தகுமார், திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் அரசியல் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள அரசாணை வெளியிட்டிருந்த நிலையிலும், இன்னும் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படவில்லை. இந்த நிலையில், பொள்ளாச்சியை அடுத்த மாக்கினம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசு இல்லத்தில் நேற்று சி.பி.சி.ஐ.டி., போலீசார் மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, திருநாவுக்கரசர் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

இதனிடையே, முக்கியக் குற்றவாளி திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வர இருப்பதால், திருநாவுக்கரசு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விசாரணை நடைபெறவிருந்த இடத்திற்கு அருகே அதிகளவு வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எனவே, சட்டம், ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு திருநாவுக்கரசை ஆஜர்படுத்துவதை போலீசார் தாமதப்படுத்தி வந்தனர். 

இந்த நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி, பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனடிப்படையில், குற்றவாளிகளிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்க நீதிபதிகள் முடிவு செய்தனர். தற்போது, வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், காவல்துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...