கோவை : மருதமலை அருகே உள்ள பட்டா நிலத்தில் ஏற்பட்டு, வனங்களுக்கு பரவிய காட்டுத் தீயை நள்ளிரவு வரையிலும் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் போராடி அணைத்தனர்
கோவை : மருதமலை அருகே உள்ள பட்டா நிலத்தில் ஏற்பட்டு, வனங்களுக்கு பரவிய காட்டுத் தீயை நள்ளிரவு வரையிலும் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் போராடி அணைத்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரமான மருதமலைக்கு அருகே உள்ள பட்டா நிலங்ததில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ படிப்படியாக, அருகே உள்ள வனத்துறையினருக்கு சொந்தமான வனப்பகுதிக்கும் வேகமாக பரவியது. இது குறித்து அறிந்த வனத்துறையினர் மற்றும் தடாகம் மற்றும் துடியலூர் பகுதிகளைச் சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று மதியம் ஏற்பட்ட இந்தக் காட்டுத் தீ நள்ளிரவு வரையிலும் கொளுந்து விட்டு எரிந்தது. இதனை வனத்துறையினரும், தன்னார்வலர்களும் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த மாதத்தில் மட்டும் கோவை மாவட்ட வனப்பகுதியில் 8-வது முறையாக காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.