மதுரைக்கு மட்டும் தேர்தலை ஒத்திவைக்க முடியாது : தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

கோவை : மதுரைக்கு மட்டும் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கோவை : மதுரைக்கு மட்டும் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. குறிப்பாக தேர்தல் நாளான 18-ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இவ்விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் வாக்குப்பதிவு குறையும் என்றும், தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்வதில் இடையூறு ஏற்படும் என்றும் அஞ்சப்படுகிறது.

எனவே, சித்திரைத்திருவிழா நாளில் தேர்தல் நடத்துவதை எதிர்த்து பாஸ்கர் சாரதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான தேர்தல் ஆணைய வழக்கறிஞர், தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்போது, மதுரைக்கு மட்டும் வாக்குப்பதிவை மாற்ற முடியாது. மதுரையைப் போன்று இந்தியா முழுவதும் கேட்டால் என்ன செய்வது..? எனக் கூறினார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, தமிழ்நாடு முழுவதும் தேர்தலை ஏன் ஒத்திவைக்கக் கூடாது..? எனக் கேள்வி எழுப்பினர். மேலும், இது தொடர்பாக, நாளை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. 

Newsletter

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...