'தேன்கூடு' சூப்பர் மார்க்கெட் கோவையில் அறிமுகம்

கோவை : ஊசி முதல் விமானம் வரையில் அனைத்துவிதமான பொருட்களும் விற்பனை செய்யப்படும் வகையிலான 'தேன்கூடு' சூப்பர் மார்க்கெட் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோவை : ஊசி முதல் விமானம் வரையில் அனைத்துவிதமான பொருட்களும் விற்பனை செய்யப்படும் வகையிலான 'தேன்கூடு' சூப்பர் மார்க்கெட் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



கோவையில் நேற்று நடைபெற்ற திறப்பு விழாவில், நிறுவனர் சுந்தரவடிவேலு சூப்பர் மார்க்கெட்டை திறந்து வைத்தார். பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "தேன்கூடு குழுமமானது, மக்களின் நம்பிக்கை, நேர்மைக்கு ஏற்றாற்போலான நிறுவனமாகும். இது வெறும் வர்த்தக நிறுவனம் அல்ல. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள நிறுவனம்," என்றார். 



இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஓய்வுபெற்ற ஐ.ஜி., ஏ. பாரி கூறியதாவது : சமூக நோக்கத்துடன் செயல்படுத்தப்படும் வர்த்தகம், நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். கோவை மாவட்டம் தொழில் தொடங்குவதற்கு சரியான சுற்றுச்சூழலைக் கொண்டுள்ளது. இந்த வர்த்தக முறை மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை அளிக்கிறது, எனக் கூறினார். 



"ஊசி முதல் விமானம் வரையில் அனைத்துவிதமான பொருட்களும் விற்பனை செய்யப்படும் இடமாக 'தேன்கூடு' திகழ்கிறது. நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எங்களது குழுமம் தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு எண்ணங்களைக் கொண்ட மக்களை ஓரிடத்தில் சேர்க்கும் வகையில் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது," என்கிறார் தேன்கூடு நிறுவனத்தின் தலைவர் எஸ்.வி. சக்கரவர்த்தி. 



முன்னதாக, இந்த நிகழ்ச்சி, 15 பெண்கள் அடங்கிய குழுவின் பாரம்பரிய நடன நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருப்பூர் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முகமது ஜியாபுதின், கே.ஜி.ஐ.எஸ்.எல்.லின் இயக்குநர் அசோக் பக்தாவச்சலம் மற்றும் சமூக ஆர்வலர் அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...