கோவை : பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை கண்டித்து தி.மு.க. சார்பில் பொள்ளாச்சியில் உள்ள திருவள்ளுவர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் என பல கூட்டணி கட்சிகளும் கலந்து கொண்டுள்ளன. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்த பாலியல் விவகாரம் தொடர்பாக நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.