செல்வபுரம் அருகே உறவினர்களுக்குள் நிகழ்ந்த மோதலில் ஒருவர் பலி : கொலையாளிக்கு வலைவீச்சு

கோவை : செல்வபுரம் பகுதியில் உறவினர் இருவருக்குள் நடந்த மோதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை : செல்வபுரம் பகுதியில் உறவினர் இருவருக்குள் நடந்த மோதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

செல்வபுரம் தில்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் மைதீன் (35). இவரும், இவரது மாமாவிற்கும் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று வாக்குவாதம் முற்றியதில், இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, மைதீனை அவரது மாமா தள்ளிவிட்டுள்ளார். இதில், மைதீன் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் மைதீனின் மாமாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்த மைதீனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...