நாடாளு., தேர்தல் தேதி வெளியாவதற்கு முன்பு அவசர அவசரமாக பதவியேற்ற சைலேந்திர பாபு

கோவை : பதவி உயர்வு பெற்ற கோவை ரயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு, நேற்று மாலை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, அவசரம் அவசரமாக கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.


கோவை : பதவி உயர்வு பெற்ற கோவை ரயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு, நேற்று மாலை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, அவசரம் அவசரமாக கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழக அரசின் உள்துறை செயலகம் நேற்று 5 உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி செய்தி குறிப்பு வெளியிட்டிருந்தது. இதில், போக்குவரத்து சாலை பாதுகாப்பு பிரிவில் ஏ.டி.ஜி.பி.,யாக இருந்த கரண்சின்காவுக்கு, இதே துறையில் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக இருந்த விஜயகுமார் சிறப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே ஏ.டி.ஜி.பி.யாக இருந்து வரும் சைலேந்திரபாபுவுக்கு ரயில்வே டி.ஜி.பி யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. காவலர் பயிற்சி ஏ.டி.ஜி.பி.யாக இருந்து வரும் குடவாலா, டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, குடிமை பொருள் வழங்கல் டி.ஜி.பி.யாக பிரதீப் பிலிப் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை குற்றப்பிரிவு எஸ்.பி. ராஜன் தர்மபுரி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக ரயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று கோவையில் உள்ள காளப்பட்டி அருகே நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த சமயத்தில் சைலேந்திரபாபு உள்ளிட்ட 5 கூடுதல் டி.ஜி.பி.க்களுக்கு அதே துறையில் டி.ஜி.பி. (காவல்துறை தலைமை இயக்குநர்) பதவி உயர்வு அளிக்கப்பட்டு, தமிழக அரசின் உள்துறை செயலகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், நேற்று மாலை மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என்பதால், உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளவும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது. 

இதையடுத்து, தனியார் நிகழ்ச்சி முடிந்த பின்னர், கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து பதவி உயர்வுக்கான ஆவணத்தில் கையெழுத்து இட்டு ரயில்வே டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், அந்த ஆவணம் இணையதளம் மூலம் உள்துறை செயலர் அலுவலகம், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்துக்கு மாநகர காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிகிறது. பின்னர், மாலை கோவையில் இருந்து சென்னைக்கு ரயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு புறப்பட்டு சென்றார். 

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...