தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் : தமிழக தேர்தல் ஆணையம்

கோவை : தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கோவை : தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 22 மாநிலங்களுக்கு வரும் 18-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் போது, தமிழகத்தின் 21 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும், இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், மார்ச் 19-ம் தேதி வேட்பு மனு தாக்கலும், மார்ச் 26-ம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. வேட்பு மனு பரிசீலனை மார்ச் 27-ம் தேதியும், மார்ச் 29-ம் தேதியும் மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். 

நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு கூறுகையில், "தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும். வழக்கு நிலுவையில் உள்ளதால், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் இந்தத் தேர்தலில் போட்டியிடலாம்," எனக் கூறினார். 

இதேபோல, புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு செய்தியாளர்களிடம் கூறுகையில், "புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுடன் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும்," என்றார். 

புதுச்சேரியில் சொத்து குவிப்பு வழக்கில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் பதவியிழந்ததால் இடைத்தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...