தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் : நாடாளுமன்றத் தேர்தலுடன் 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு

கோவை : தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதாக டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். மேலும், இந்தத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை : தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதாக டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். மேலும், இந்தத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- தேர்தலை சுதந்திரமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாநில தலைமை தேர்தல் ஆணையர்கள், தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகளோடு விரிவான ஆலோசனை நடத்தியுள்ளோம். 23 மாநிலங்களில் 100 சதவிகித வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கல் நடைபெறும் கடைசி நாள் வரை வாக்காளர் பட்டியல்கள் திருத்தம் நடைபெறும்.

தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. விதிகளை மீறினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 18 முதல் 19 வயதுக்குள் 1.5 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலை அமைதியாக நடத்த மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட உள்ளனர். நாட்டில் மொத்தம் 90 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 1.5 கோடி பேர் புதிய வாக்காளர்கள் ஆவர். பூத் ஸ்லிப்புகளை வைத்து மக்களவைத் தேர்தலில் இந்த முறை வாக்களிக்க முடியாது. வாக்காளர்கள் 1,950 என்ற இலவச எண்ணில் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். தேர்தல் ஆணையத்துடன் 10 லட்சம் வாக்குச் சாவடிகள் இணைக்கப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களில் செய்யப்படும் பிரச்சாரத்தை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளை மீறுபவர்களை வாக்காளர்களே படம்பிடித்து அனுப்பலாம். 1991 முதல் 2011 வரை மக்கள் தொகை 3 மடங்காக அதிகரித்துள்ளது. 

17-வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற இருக்கிறது. முதற்கட்ட தேர்தல் 11-ம் தேதியும், 2-ம் கட்ட தேர்தல் ஏப்.,18ம் தேதியும் நடக்கிறது. ஏப்., 23-ம் தேதி மூன்றாவது கட்ட தேர்தலும், ஏப்.,29-ம் தேதி 4-ம் கட்ட தேர்தலும், மே 5-ம் தேதி 5-ம் கட்ட தேர்தலும், மே 12-ல் ஆறாம் கட்ட வாக்குப்பதிவும், மே 19-ம் 7-ம் கட்ட தேர்தலும் நடக்கும். தேர்தல் முடிவுகள் மே 23-ல் அறிவிக்கப்படும். வாக்குப்பதிவிற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் 36 நாட்கள் இடைவேளை உள்ளன. ஆந்திரா, அருணாச்சலம், கோவா, குஜராம், ஹரியானா, இமாச்சல பிரதேசம், கேரளா, மேகலாயாவுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடக்கிறது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரி : 

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 22 மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறும். தமிழகம், புதுசேரி ஆகிய மாநிலங்களுக்கு 2-வது கட்டமாக தேர்தல் நடைபெறும். தமிழகத்தில் மார்ச் 19-ம் தேதி வேட்பு மனு தாக்கலும், மார்ச் 26-ம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்பு மனு பரிசீலனை மார்ச் 27-ம் தேதியும், மார்ச் 29-ம் தேதியும் மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இந்த அறிவிப்பின் போது, தமிழகத்தின் 21 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும், இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்தப்படும். 

சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு ஜம்மூ - காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் தற்போது கிடையாது. மக்களைத் தேர்தலுடன் 74 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறும். ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலுடன் இணைத்து நடத்தப்படும், இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...