கோவை : மேட்டுப்பாளையத்தில் புதிய ஏ.டி.எம். கார்டினை ஏக்டிவேசன் செய்து தருவதாகக் கூறி ஏ.டி.எம். கார்டினையே மாற்றி கொடுத்து 42 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்த நபரை சி.சி.டி.வி காட்சிகள் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

மேட்டுப்பாளையத்தை அடுத்த தென் திருப்பதி நால்ரோடு பகுதியை சேர்ந்தவர் தங்கமணி. இவர், கடந்த 8-ம் தேதி தனது புதிய ஏ.டி.எம் கார்டினை ஏக்டிவேட் செய்வதற்காக மேட்டுப்பாளையத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கிளைக்கு வந்துள்ளார். அங்கு வங்கி அதிகாரிகள் மூலம் கார்டினை ஏக்டிவெட் செய்து விட்டு, வங்கிக்கு வெளியே உள்ள ஏ.டி.எம் மெஷினில் சோதனை செய்ய சென்றுள்ளார். அங்கு தங்கமணிக்கு புதிய கார்டினை பயன்படுத்த தெரியாததால், அருகில் இருந்த நபர் ஒருவர் அனைவருக்கும் இதுபோன்ற உதவிகளை செய்து கொண்டிருந்ததைப் பார்த்து, அவரிடம் சோதனை செய்து பார்த்து தருமாறு கேட்டுள்ளார்.

இதனைப் பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், தங்கமணியிடம் கார்டினை பெற்று சோதனை செய்வது போல, அவரது ரகசிய எண்ணையும் தெரிந்து கொண்டு சரியாக உள்ளதாகக் கூறி விட்டு, தங்கமணியின் ஏ.டி.எம். கார்டுக்கு பதிலாக, வேறு ஒரு ஏ.டி.எம் கார்டினை அவரிடம் கொடுத்துள்ளார். அவரும் அதனை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, தங்கமணி வீட்டிற்கு செல்வதற்குள் அவரது வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 42,000 ரூபாய் வரை எடுக்கப்பட்டதாக அவரது செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் வந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் அவர் புகார் அளித்துள்ளார். போலீஸ் விசாரணையில், தங்கமணியின் ஏ.டி.எம் கார்டினை திருடிய அந்த நபர் வேறு ஒரு ஏ.டி.எம்.மில் 20,000 ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். மேலும், ஊட்டி சாலையில் உள்ள ஒரு தங்க நகைக்கடைக்கு சென்று 22,000 ரூபாய் மதிப்பில் தங்க நகையினை வாங்கி விட்டு, அதனை ஸ்வைப் மெசினில் தங்கமணியின் ஏ.டி.எம். கார்டினை பயன்படுத்தி பணம் செலுத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து, வங்கி ஏ.டி.எம்மில் உள்ள சி.சி.டிவி காட்சிகள் மற்றும் நகைக்கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான அவரது படத்தை வைத்து மேட்டுப்பாளையம் போலீசார் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட அந்த நபரை தேடி வருகின்றனர்.