கோடை சீசனுக்கு முன்பாக சாலை விரிவாக்கப் பணிகள் முடிவு பெறுமா..? : உதகை மக்கள் எதிர்பார்ப்பு

நீலகிரி : உதகையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை விரிவாக்கப் பணிகள் கோடை சீசனுக்குள் நிறைவேற்றப்படுமா..? என்ற எதிபார்ப்பு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி : உதகையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை விரிவாக்கப் பணிகள் கோடை சீசனுக்குள் நிறைவேற்றப்படுமா..? என்ற எதிபார்ப்பு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.



குன்னூர் - உதகை சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. 'இச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்,' என பல்வேறு அமைப்பினர் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின், வேலிவியூ சந்திப்பிலிருந்து பிங்கர்போஸ்ட் வரை சுமார் 4.5 கி.மீ., தூரம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்து, 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை நீர் செல்ல கல்வெட்டு மற்றும் தடுப்பு சுவர் அமைக்க 27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 



இப்பணி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்டு நடந்து வருகிறது. இந்நிலையில், தலையாட்டி மந்து, சத்துணவு பஸ் ஸ்டாப், ஆவின் பகுதி, உதகை நகர் பகுதியில் உள்ள சாலைகள் மிக முக்கிய சாலை என்பதால், இதன் விரிவாக்கப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. வரும் மே மாதம் உதகையில் நடைபெறும் கோடை சீசனுக்கு லட்சகணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்பதால், இந்த குன்னூர் உதகை சாலை விரிவாக்கப் பணிகள் அதற்குள் முடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Newsletter

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...