கவுண்டம்பாளையத்தில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் மீட்கப்பட்ட குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு

கோவை : கவுண்டம்பாளையம் அருகே மாட்டுப் பண்ணையில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தைக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, சரணாலயம் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.


கோவை : கவுண்டம்பாளையம் அருகே மாட்டுப் பண்ணையில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தைக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, சரணாலயம் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கவுண்டம்பாளையம் அருகே உள்ள சரவணன் நகரில் திருப்பதி கோவில் உள்ளது. இங்கு மாட்டுப்பண்ணை வைத்திருப்பவர்கள் சிவராமசந்திரன் மற்றும் அமுல் தம்பதியினர். இங்கு அமுல் வழக்கம் போல பண்ணையில் மாட்டுச்சாணம் எடுக்க சென்றிருந்த போது, அங்கு குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அமுல், தனது கணவனை வரவழைத்து அவசர உதவி எண்னான 100-க்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், தகவல் அறிந்து அங்கு வந்த துடியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் குழந்தையை துடியலுரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை மேற்கொண்டனர். பின்னர், குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் இந்த குழந்தைக்கு போதுமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மேலும், மருத்துவமனையின் செவிலியர்கள் உதவியுடன் இந்த குழந்தைக்கு செயற்கை முறையில் தாய்ப்பால் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, குழந்தை ஆரோக்கியமான சூழலுக்கு வந்ததையடுத்து, நேற்று மருத்துவமனையின் இருப்பிட மருத்துவர் டாக்டர்.சௌந்தர்வேல் முன்னிலையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு பொறுப்பாளர் ரெக்ஸிலின் மேற்பார்வையில், அரசு அங்கீகாரம் பெற்ற சரணாலயம் குழந்தைகள் பாதுகாப்பு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், சமூக பாதுகாப்பு துறை சார்பாக இந்த குழந்தை குறித்து விசாரணை மற்றும் விளம்பரம் கொடுத்து, குழந்தையின் பெற்றோர்கள் வராத நிலையில், குழந்தையை சட்டத்திற்கு உட்பட்டு தத்துக் கொடுப்போம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...