கட்சி விழாவா...? அரசு விழாவா..? : கோவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடந்த நலத்திட்ட விழாவில் கட்சி கொள்கை பாடல்கள் ஒலிபரப்பு

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கட்சியின் கொள்கை பாடல்கள் ஒலிபரப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கட்சியின் கொள்கை பாடல்கள் ஒலிபரப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு இடம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு தொகை,ப்புறக்கடை கோழி வளர்ப்பு திட்ட பயனாளிகளுக்கு நிதியுதவி மற்றும் மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு இடம் கையகப்படுத்தப்பட்டு, இதற்கான இழப்பீடு தொகை நிலுவையில் இருந்து வந்த நிலையில், 134 பயணாளிகளுக்கு 75 கோடி ரூபாய்க்கான நிதி ஒதுக்கப்பட்டது. முதற்கட்டமாக, இன்று 13 பயனாளிகளுக்கு 1.60 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. விவசாய நிலங்களுக்கு 900 ரூபாயும், மனைகளுடனான இடங்களுக்கு

1,500 ரூபாய் என வழங்கப்பட்டது. 



மேலும், புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ், 1,600 பேருக்கு தலா 50 கோழிகள் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக, 80 பயணாளிகளுக்கு 5.12 லட்சம் வழங்கப்பட்டது. இதில், ஒரு நபர் இந்த திட்டத்தின் கீழ் கூரை அமைக்க ரூ. 2,500-ம், கோழி வளர்ப்பிற்கு ரூ. 3,690 என சேர்த்து மொத்தம் ரூ. 6,400 வழங்கப்பட உள்ளது. மொத்த பயனாளிகள் 1,600 பேருக்கு 1 கோடியே இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மாற்று திறனாளிகளுக்கு 30 பேருக்கு 15 லட்சத்து 85 ஆயிரத்து 860 ரூபாய் செலவில் ஸ்கூட்டரும், 90 பேருக்கு 3 லட்சத்து 76 ஆயிரத்து 200 ரூபாய் செலவில் தையல் இயந்திரமும், 24 பேருக்கு 35 ஆயிரத்து 520 ரூபாய் மதிப்பில் செயற்கை கால்களும், 24 பேருக்கு 35 ஆயிரத்து 520 செலவில் நடை வண்டிகளும் என 25,83,580 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் ராசாமணி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன்,கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர்

கஸ்தூரி வாசு மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.



மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அரசு சார்பில் நடைபெற்ற நலத்திட்ட விழாவில், கட்சி கொள்கை பாடல்கள் ஒலிபரப்பு செய்யபட்டது. இது அங்கிருந்தவர்களை அதிருப்தியடையச் செய்தது. மேலும், 8 மணிக்கு விழா துவங்கும் என தெரிவிக்கபட்டு இருந்த நிலையில், வழக்கம் போல் 9 மணிக்கு அமைச்சர் கலந்து கொண்டு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...