கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு வீடு கொடுப்பவர்களுக்கு, வேறு இடத்தில் வீடு கட்டி கொடுக்கப்படும் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு

கோவை : கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு வீடு கொடுப்பவர்களுக்கு, புதியாக நிலம் கொடுத்து வீடு கட்டி கொடுக்கும் திட்டமும் செயல்படுத்த இருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.


கோவை : கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு வீடு கொடுப்பவர்களுக்கு, புதியாக நிலம் கொடுத்து வீடு கட்டி கொடுக்கும் திட்டமும் செயல்படுத்த இருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு இடம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு தொகை, கோழி வளர்ப்பு திட்ட பயணாளிகளுக்கு நிதியுதவி மற்றும் மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வழங்கினார். 

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது :- விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கொடுக்கும் மக்கள் வழிகாட்டி மதிப்பினை அதிகரிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனை ஏற்று தமிழக முதலமைச்சரின் அறிவுறித்தலின் பேரில், வழிகாட்டி மதிப்பு அதிகரிக்கப்பட்டு வழங்கபட்டு உள்ளது. மேலும், விமான நிலைய விரிவாக்கத்திற்கு வீடு கொடுப்பவர்களுக்கு புதியாக நிலம் கொடுத்து வீடு கட்டி கொடுக்கும் திட்டமும் செயல்படுத்த இருக்கிறோம். இது கோவை மாவட்டத்திற்கு முக்கியமான நாள். கோவை விமான நிலைய விரிவாக்கம் நடைபெற்றால், கோவை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும். 

விரிவாக்கத்திற்கு மொத்தம் 627 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. விமான விமான நிலையம் விரிவாக்கம் முடிந்த பிறகு, ஐ.டி. நிறுவனங்கள் உட்பட ஏராளமான நிறுவனங்கள் இங்கு வர வாய்ப்பு உள்ளது. லட்சகணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், வியாபாரம் பெருகி வருவாய் அதிகரிக்கும். கோவை சுங்கம் பாலம், கவுண்டம்பாளையம் பாலம் ஆகியவற்றிற்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்ட இருக்கிறார், என்றார்.

தொடர்ந்து, தே.மு.தி.க உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு, தே.மு.தி.க உடனான கூட்டணி உடன்பாடு குறித்து முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பதில் சொல்லி உள்ளனர். நல்லபடியாக முடிந்துவிடும், என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...