கோவை : காரமடை அருகே உள்ள சாந்தி வனப்பகுதியில் 20,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

சாந்திநிகேதன் நிறுவன குழுமத்திற்கு சொந்தமாக கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் 132 ஏக்கர் பரப்பளவு கொண்ட சாந்தி வனம் உள்ளது. இதனை ஜெயன்திலால் ஜி. பஃப்னா மற்றும் அருண்குமார் ஜி. பஃப்னா ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரோட்டரி கோவை ஜெனித் மற்றும் சாந்திநிகேதன் நிறுவன குழுமம் இணைந்து சாந்தி வனத்தில் 20,000 மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை மாவட்ட கவர்னர் ரோட்டரியன் ஏ.வி. பதி தொடங்கி வைத்தார்.

"முதற்கட்டமாக 20,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது. எங்களது இலக்கு 2,00,000 மரக்கன்றுகளை நடவு செய்வதாகும். அடுத்த கட்டமாக, சுமார் 30,000 மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்றார் அருண்குமார் ஜி. பஃப்னா.