நீலகிரியில் எழுப்பப்படும் கட்டிடங்களால், நிலத்தடி நீர்பற்றாக்குறை ஏற்படும் அபாயம் : பி.ஆர் பாண்டியன் பேட்டி

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் எழுப்பப்படும் கட்டிடங்களால், நிலத்தடி நீர்பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், இதனால், விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளர் பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் எழுப்பப்படும் கட்டிடங்களால், நிலத்தடி நீர்பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், இதனால், விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளர் பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணும் வகையில், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பொதுச்செயலாளர் பி.ஆர்., பாண்டியன் தலைமையில் மார்ச் 1-ம் தேதி தேனி மாவட்டத்தில் பிரச்சாரப் பயணம் தொடங்கப்பட்டு, துண்டு பிரச்சார அறிக்கைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, நீலகிரி மாவட்டம் உதகை ஏ.டி.சி. திடல் பகுதியில் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.



பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஆர்., பாண்டியன் பேசியதாவது :- பொதுப்பணித்துறையினர் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், நிலத்தடி நீர் குறித்த ஆய்வில், தமிழகத்தில் சுமார் 463 இடங்களில் பேரிடர் ஏற்படும் அபாயம் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் எழுப்பப்படும் கட்டிடங்களால், நிலத்தடி நீர்பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய நீர்பற்றாக்குறை ஏற்படும். மேலும், நீலகிரி மாவட்டத்தில் நீர் ஆதாரங்களுக்கு வழி வகையாக அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் மரங்கள் நடுவதில் மத்திய, மாநில அரசுகள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.



மேலும், நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சாகுபடியான தேயிலைத்தூள், கிலோவிற்கு ரூ. 150 என்ற விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்தால் மட்டுமே, பசும் தேயிலைக்கு விவசாயிகள் கிலோவிற்கு ரூ. 30 பெற முடியும், எனக் கூறினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...