கோவை : கோவை மாநகராட்சியில் ரூ. 3 கோடியே 53 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், 92-வது வார்டு சுகுணாபுரம் கிழக்கு, ரெயின்போ காலனி பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ. 82.50 லட்சம் மதிப்பில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்கும் பணியினையும், ரெயின்போ காலனி பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 39.10 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கும் பணியையும் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதேபோல, செந்தமிழ்நகர் மற்றும் சுகுணாபுரம் கிழக்கு பள்ளிவாசல் வீதி பகுதியில் ரூ. 71.80 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் மற்றும் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியினையும், செந்தமிழ்நகர் பிரதான சாலையில் ரூ. 35 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினையும், செந்தமிழ்நகர் சமுதாயகூடம் செல்லும் சாலைக்கு ரூ. 23 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை மற்றும் தடுப்பு சுவர் அமைக்கும் பணியினையும் அவர் ஆரம்பித்து வைத்தார்.
பின்னர், சுகுணாபுரம் கிழக்கு பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ. 17.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியினையும், சுகுணாபுரம் கிழக்கு செந்தமிழ்நகர் பகுதியில் ரூ. 84.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட அம்மா சமுதாய நலக்கூடத்தினையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில், மாநகரப் பொறியாளர் ஆ. லட்சுமணன், தெற்கு மண்டல உதவி ஆணையாளர் டி.ஆர். ரவி, செயற்பொறியாளர் ஞானவேல் மற்றும் அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.