கோவை : கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வீடற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி மற்றும் வாழ்வுரிமைக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிடத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளிக்கப்பட்டது.

கட்டிட கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி செய்து தரப்பட வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும், விபத்து சிகிச்சைக்கு நிவாரணம் வழங்க வேண்டும், குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்க வேண்டும், இ.எஸ்.ஐ., பி.எஃப் போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி., கட்டட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதேபோல, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிட கட்டுமான தொழிலாளர்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.