கோவை : பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு ஜான்சன்ஸ் குழந்தைகள் டால்கம் பவுடர் பாதுகாப்பானது என மத்திய அரசு உறுதி செய்த நிலையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தனது உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளது.
கோவை : பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு ஜான்சன்ஸ் குழந்தைகள் டால்கம் பவுடர் பாதுகாப்பானது என மத்திய அரசு உறுதி செய்த நிலையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தனது உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்த டால்கம் பவுடரில் கல்நார் எனப்படும் ஆஸ்பெஸ்டாஸ் இல்லை என அரசால் நடத்தப்பட்ட சோதனையில் தெரிய வந்ததை அடுத்து, உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. பல ஆண்டுகளாக பல்வேறு பல்கலைக்கழகங்கள், ஆய்வகங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் அரசு ஒழுங்குமுறை ஆணையங்கள் கண்டறிந்த முடிவுகளுக்கு வலுசேர்க்கும் வகையில், இந்த முடிவு அமைந்துள்ளது.
டால்கம் பவுடர் பாதுகாப்பானது என உலகின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் தொடர்ந்து உறுதி செய்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர், தாய்லாந்து, சவூதி அரேபியா, ஜோர்டான், குவைத், எகிப்து ஆகிய நாடுகளின் ஒழுங்குமுறை ஆணையங்களும், ஜான்சன் அண்ட் ஜான்சன் டால்கம் பவுடரின் தூய்மையை மறு உறுதி செய்துள்ளன. டால்கம் பவுடர் வழக்கமாக விநியோகஸ்தர்கள் மற்றும் தனி ஆய்வகங்கள் மூலம் சோதனை செய்யப்படும். ஆஸ்பெஸ்டாஸ் இல்லை என்பதை உறுதி செய்ய இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு முழுமையாகவும், வெளிப்படையாகவும் ஒத்துழைப்பு வழங்குகிறது. 1960-ம் ஆண்டு முதல் அவர்கள் கேட்கும் தகவல்களை முழுமையாக நிறுவனம் வழங்குகிறது. மேலும், முக அழகு பவுடரின் மூலப்பொருட்கள், செயல்முறைப்படுத்தப்பட்ட டால்கம் பவுடர் ஆகியவற்றையும் சோதனைக்காக அவர்களுக்கு வழங்குகிறது.
ஆய்வுகள், மருத்துவ ஆதாரங்கள், உலகெங்கிலும் உள்ள தனிநபர் மருத்துவ வல்லுநர்களின் 40 ஆண்டுகால சோதனைகள் ஆகியவை இந்த ஜான்சன் முக அழகு பவுடரின் பாதுகாப்புத் தன்மையை தொடர்ந்து உறுதி செய்து வருகின்றன. இந்த டால்கம் பவுடர் புற்றுநோயையோ அல்லது ஆஸ்பெஸ்டாஸ் தொடர்பான நோய்களையோ ஏற்படுத்தாது என பல ஆயிரம் பெண்கள் மற்றும் பல ஆயிரம் ஆண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. மேலும், விவரங்களுக்கு http://www.factsabouttalc.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.