Exclusive : வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு சிறப்பு நிதி : கோவையில் 5 லட்சத்து 20 ஆயிரம் குடும்பங்கள் விண்ணப்பம்

கோவை : தமிழக அரசால் வழங்கப்படும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கான சிறப்பு நிதி ரூ. 2,000-த்தை பெறுவதற்காக கோவை மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 20 ஆயிரம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன.


கோவை : தமிழக அரசால் வழங்கப்படும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கான சிறப்பு நிதி ரூ. 2,000-த்தை பெறுவதற்காக கோவை மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 20 ஆயிரம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன. 

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக ஒருமுறை ரூ. 2,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தினை நேற்று தொடங்கி வைத்தார்.

இதனிடையே, கோவை மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை கணக்கெடுக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. கோவை ஊரக பகுதிகள், நகர்ப்புற பகுதிகள், மாநகராட்சி வார்டுகள் என பகுதி வாரியாக விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு ஊரக மேம்பாட்டு வளர்ச்சித் துறை (மகளிர்) தான் இந்த விண்ணப்பங்களை இ-மதி இணையதளம் மூலம் தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கிறது.

இது குறித்து கோவை மாவட்ட திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) கூறுகையில் "கோவை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 5 லட்சத்து 20 ஆயிரம் குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் விண்ணப்பித்துள்ளன. இதில், கோவை ஊரக பகுதிகளில் இருந்து 3 லட்சத்து 25 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. கோவை மாநகராட்சி பகுதிகளில் இருந்து 1 லட்சத்து 95 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. நகராட்சிகளில் இருந்து 40 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. டவுன் பஞ்சாயத்துகளிலிருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த விண்ணப்பங்களை அரசாங்கத்தின் இ-மதி இணையதளத்தில் ஏற்றும் பணியானது நடைபெற்று வருகிறது," என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...