கோவை : அரிய வகை நோய்களிடம் இருந்து தங்களை எவ்வாறு காத்துக் கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் சார்பில் நேற்று நடத்தப்பட்டது.

பி.எஸ்.ஜி. மருத்துவமனை மற்றும் இந்தியாவின் அரிய நோய்களுக்கான அமைப்பு ஆகியவை இணைந்து நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியை, தமிழகத்தைச் சேர்ந்த இந்தியாவின் ஃபார்முலா 1 வீரர் நரேன் கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், சுமார் 1,200-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டு ஓடினர். பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் தொடங்கிய இந்த மாரத்தான் ஜி.வி. ரெசிடென்சி, மசக்காளி பாளையம், உமா நகர் ஆகிய வழிகளைக் கடந்து மீண்டும் பி.எஸ்.ஜி. மருத்துவமனையிலேயே நிறைவடைந்தது.

இந்த போட்டியின் போது சுமார் 7,000 அரிய வகை நோய்கள் குறித்து போட்டியாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.