Traffic Alert: இன்று மாலை ஈசா யோகா மையத்தில் மகாசிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு ; போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு!

கோவை : இன்று மாலை ஈஷா யோகா மையத்தில் நடக்கவிருக்கும் மகாசிவராத்திரி விழாவிற்கு மேதகு குடியரசுத் தலைவர் அவர்கள் பங்கேற்க உள்ளதால், கோவையில் இருந்து சிறுவாணி ரோடு வழியாக பேரூர், மாதம்பட்டி ,ஆலந்துறை வழியாக ஈசா யோகா விற்கு செல்லும் பொதுமக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மாற்றுப்பாதையில் இன்று மாலை 6 மணி முதல் செல்லுமாறு 8:30 மணி வரை செல்லுமாறு காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கோவை : இன்று மாலை ஈஷா யோகா மையத்தில் நடக்கவிருக்கும் மகாசிவராத்திரி விழாவிற்கு மேதகு குடியரசுத் தலைவர் அவர்கள் பங்கேற்க உள்ளதால்,  கோவையில் இருந்து சிறுவாணி ரோடு வழியாக பேரூர், மாதம்பட்டி ,ஆலந்துறை வழியாக ஈசா யோகா விற்கு செல்லும் பொதுமக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மாற்றுப்பாதையில் இன்று மாலை 6 மணி முதல் செல்லுமாறு 8:30 மணி வரை செல்லுமாறு காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாற்றுப்பாதைகள் :

மேட்டுப்பாளையம் சாலை வழியாக வரும் பொதுமக்கள் அவினாசிலிங்கம் கல்லூரி சந்திப்பு, ஜி.சி.டி கல்லூரி சந்திப்பு, லாலி ரோடு சந்திப்பு, பி.என்.புதூர், வடவள்ளி, போளுவாம்பட்டி, தொண்டாமுத்தூர் வழியாக ஈஷாவிற்கு செல்லலாம்.

அதேபோல அவிநாசி சாலை வழியாக வரும் பொதுமக்கள் அவினாசி சாலை மேம்பாலம், ப்ரூக்ஃபீல்ட்ஸ் சாலை, கௌலி பிரவுன் சாலை, லாலி ரோடு என வடவள்ளி வழியாக செல்லலாம். 

அதேபோல பாலக்காடு சாலை வழியாக வரும் பொதுமக்கள் கோவைப்புதூர் பிரிவு, சுண்டக்காமுத்தூர், பச்சாபாளையம், மாதம்பட்டி வழியாக செல்லலாம்.

பொள்ளாச்சி சாலை வழியாக வரும் பொதுமக்கள் கற்பகம் கல்லூரி, எல் அண்ட் டி பைபாஸ், மதுக்கரை மார்க்கெட் ரோடு, கோவைபுதூர் பிரிவு, சுண்டக்காமுத்தூர், பச்சாபாளையம், என மாதம்பட்டி வழியாக செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் வழிகள் அனைத்தும் வழக்கம்போல செயல்படும் ஆகவே பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...