வீடு கட்டித் தருவதில் காலதாமதம் : திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்ட திருநங்கைகள்

திருப்பூர் : கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட நிலையில், தற்போது வரை வீடு கட்டி தரவில்லை எனக் கூறி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட நிலையில், தற்போது வரை வீடு கட்டி தரவில்லை எனக் கூறி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வசித்து வரும் திருநங்கைகளுக்கு கடந்த 2015-ம் ஆண்டு நெருப்பெரிச்சல் பகுதியில் வீட்டுமனை ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தில் அவர்கள் வீடு கட்டிக் கொள்ளவும், அதற்கான நிதி இந்திராகாந்தி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்ததற்கான ஆணையும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனிடையே, கடந்த 4 வருடங்களாக வீடு கட்டுவது காலம் தாழ்த்தி வருவதுடன், வீடுகட்டி கொடுக்க பணம் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. 

இந்த நிலையில், தங்களுக்கு வீடு கட்டி கொடுக்க உள்ள ஆணையின்படி, உடனடியாக பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் சமாதான பேசியதையடுத்து, ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். பின்னர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதையடுத்து, அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...