கோவை : கோவை மாவட்டத்தில் வரும் 6 மற்றும் 7-ம் தேதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் 6 மற்றும் 7-ம் தேதிகளில் கோவை, சேலம், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிப்பதோடு, அனல் காற்று வீசக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, கோவை வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் மரகதம் கூறியதாவது :- இம்மாதம் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கோவையைப் பொறுத்தவரை, அதிகபட்ச வெப்பநிலை மேலும் சிலபுள்ளிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது, 35.5 டிகிரி செல்சியசாக உள்ள அதிகபட்ச வெப்பநிலை, அடுத்த சில நாட்களுக்கு 37 அல்லது 38 ஆக உயர வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைந்தபட்ச வெப்பநிலையும் அதிகரித்துள்ளது.
சுமார் 21 டிகிரி முதல் 22 டிகிரி வரை காணப்பட்ட குறைந்தபட்ச வெப்பநிலை, தற்போது 24 டிகிரி செல்சியசாக உயர்ந்துள்ளது. இதனால் தான் வெப்பம் அதிக அளவில் உணரப்படுகிறது, என்றார்.