மருத்துவர் பற்றாக்குறையால் மூடியே கிடக்கும் வன உயிரின மருத்துவமனை : சிகிச்சையளிக்க வழியின்றி அதிகரிக்கும் காட்டுயிர்களின் உயிரிழப்புகள்

கோவை : வனத்துறையில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறையின் காரணமாக, மேட்டுப்பாளையத்தில் குரங்குகளுக்கென கட்டப்பட்டுள்ள மருத்துவமனை மூடியே கிடக்கிறது. இதனால், உயிருக்கு போராடும் காட்டுயிர்களுக்கு சிகிச்சையளிக்க வழியின்றி உயிரிழப்புகள் அதிகரிப்பதாக வன மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கோவை : வனத்துறையில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறையின் காரணமாக, மேட்டுப்பாளையத்தில் குரங்குகளுக்கென கட்டப்பட்டுள்ள மருத்துவமனை மூடியே கிடக்கிறது. இதனால், உயிருக்கு போராடும் காட்டுயிர்களுக்கு சிகிச்சையளிக்க வழியின்றி உயிரிழப்புகள் அதிகரிப்பதாக வன மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 



மேற்கு தொடர்ச்சிமலை காடுகளை ஒட்டியுள்ள கோவை வனக்கோட்டத்தில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, பெரிய நாயக்கன் பாளையம் உள்ளிட்ட 7 பெரிய வனச்சரகங்கள் உள்ளன. தமிழகம், கேரளா, மற்றும் கர்நாடகா என மூன்று மாநில காடுகளை ஒட்டி பரந்து கிடக்கும் 5,300 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள இப்பகுதி காடுகள், நீலகிரி பல்லுயிர் பெருக்கத்துடன் இணைந்துள்ள அடர்ந்த வனப்பகுதியாக இவ்வனக்கோட்டம் அமைந்துள்ளது.

இதன் காரணமாக, இம்மூன்று மாநிலங்களில் உள்ள வனப்பகுதியில் தேவைக்கேற்ப இடம் மாறும் காட்டு யானைகள், கோவை வனக்கோட்டம் வழியாகவே இடம் பெயர்கின்றன. இயற்கை எழிலுடன் அடர்ந்து காணப்படும் இக்காடுகளில் யானை, கரடி, சிறுத்தை, காட்டு மாடுகள், பல்வகை மான்கள் மற்றும் குரங்குகள் என எண்ணிலடங்கா வன உயிரினங்கள் காணப்படுகின்றன. 

குறிப்பாக, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனச்சரக காடுகளில் அரிய வகை வரிப்புலிகளும், கழுதைப்புலிகளும் உள்ளன. வனப்பரப்பும் மற்றும் அதில் வாழும் வனவிலங்குகளும் அதிகமென்பதால், இப்பகுதியில் மனித விலங்கின மோதல்களும் அதிகம். அதேபோல, மின்சார தாக்குதல், சரிவு மற்றும் சகதிகளில் சிக்கி காயமடைதல், சாலைகளை கடக்கும் போது வாகனங்கள் மோதி காயமடைவது, குடல்புழு நோய் என பல்வேறு வகையில் யானை, மான், சிறுத்தை, குரங்கு, காட்டுடெருதுகள் போன்ற வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன. 



இவ்வாறு படுகாயமடைந்து உயிருக்குப் போராடும் வன உயிரினங்களுக்கு உரிய சிகிச்சையளிக்க வனத்துறை கால்நடை மருத்துவர்கள் இல்லை. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு என ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய வன மண்டலத்திற்கு தற்போது இரண்டு வன மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். மருத்துவர்கள் பற்றாக்குறையால் மேட்டுப்பாளையத்தில் குரங்குகளுக்கென கட்டப்பட்டுள்ள மருத்துவமனையும் பூட்டியே கிடக்கின்றது. பல லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள இம்மருத்துவமனை கடந்த 2016-ம் ஆண்டு அப்போதைய மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. 

இப்புதிய கட்டிடம் திறந்த நாள் முதல் இன்று வரை மருத்துவர்கள் நியமிக்கப்படாமல் முடங்கியே கிடக்கிறது. எனவே, உடனடியாக வனத்துறையில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...