பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டும் கும்பல் : சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்

கோவை : பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து பணம், நகையை கேட்டு மிரட்டும் சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்தக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் அனைத்து அரசியல் சமுதாய இயக்கங்கள் சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை : பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து பணம், நகையை கேட்டு மிரட்டும் சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்தக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் அனைத்து அரசியல் சமுதாய இயக்கங்கள் சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அதேபோல, இணையதளங்களின் மூலம் நடைபெறும் குற்றங்களும் அதிகரித்துள்ளது. இதில், சமூகவிரோதிகள் பணம் பறிக்கும் செயலில் இளம் பெண்களை குறிவைத்து செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், பொள்ளாச்சி பகுதியில் சமூக விரோத கும்பல் ஒன்று, இளம்பெண்களை, கல்லூரி மாணவிகளை குறிவைத்து முகநூலில் நட்பாக பழகி, பிறகு காதல் வசப்படுத்தி, ஆபாச படம் எடுத்து வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 



கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், பொள்ளாச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் தொடர்பாக போலீஸார் 3 பேரை கைது செய்தனர். ஆனால், இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு தலைமறைவாக உள்ளார். மேலும், கைது செய்யப்பட்டவர்களின் மீது போடப்பட்ட வழக்கானது, சாதாரண வழக்காக உள்ளது. இதற்கு காரணம் பின்புலத்தில் அரசியல் தலையீடு உள்ளது என பொள்ளாச்சி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.



இந்த நிலையில், இன்று திருவள்ளுவர் திடலில் பொள்ளாச்சி அனைத்து கட்சி சமுதாய இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், மாதர் சங்கங்கள் என பலர் கலந்து கொண்டனர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை விரைவாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், சி.பி.சி.ஐ.டி., விசாரணை செய்ய வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.



அதேபோல, வெளிப்படையான விசாரணை மூலம் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருப்பவர்களை மக்கள் முன் நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...