கோவை : மேட்டுப்பாளையம் அருகே காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த விவசாயி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை பகுதியில் சிட்டேப்பாளையம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (49). விவசாயியான இவர், இன்று அதிகாலை பவானிசாகர் அணையின் நீர்தேக்கப் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்று விட்டு, வனத்தை ஒட்டியுள்ள பவானியாற்றில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். பின்னர், முருகேசன் தனது மகன் தங்கராஜுடன் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டு, தனது ஊரான சிட்டேப்பாளையம் திரும்ப முயன்றுள்ளார்.
காலை 11 மணியளவில் வனத்தை ஒட்டியுள்ள மண் சாலையில் இவர்கள் பயணித்த போது, எதிரே வந்த காட்டு யானைகள் இவர்களை விரட்டியுள்ளது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த முருகேசனை நீண்ட தந்தங்களுடன் இருந்த ஆண் காட்டு யானையொன்று தாக்கியுள்ளது. தங்களால் குத்தப்பட்ட முருகேசன் படுகாயமடைந்த நிலையில், அவர் வந்த இருசக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கி விட்டு யானைகள் திரும்பி சென்றுள்ளன.
இது குறித்து யானைகளிடம் இருந்து தப்பிய முருகேசனின் மகன் தங்கராஜ் ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், முருகேசனை மீட்டு 108 வாகனத்தின் உதவியுடன் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு யானை தாக்கியதில் காயமடைந்த முருகேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சிறுமுகை வனத்துறையினரிடம் கேட்ட போது, “தற்போது கோடைகாலம் தொடங்கி வனங்களுக்குள் வறட்சி நிலவுவதால், யானைகள் தண்ணீர் அருந்த நீர்தேக்கப் பகுதிகளை தேடி வந்தபடி உள்ளன. இது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வனம் சார்ந்த பகுதிகளில் நடமாட வேண்டாம். வனவிலங்குகள் நீர் அருந்த வரும் பகுதிகளில் மீன் பிடிப்பதையும், பரிசலில் பயணிப்பதையும் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளோம்,” என்றனர்.