தி.மு.க., கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

கோவை : தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கோவை : தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து தி.மு.க.,வுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் இரா.முத்தரசன் பேசியதாவது :- வரும் நாடாளுமன்றத் தேர்தல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகவும், மத்தியில் ஆட்சி செய்யும் வகுப்புவாதக் கட்சியான பா.ஜ.க.,வை அகற்றவும், தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சியை அகற்றவும், தி.மு.க., தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஒரு மகத்தான பணியை மேற்கொண்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பேச்சுவார்த்தை இன்று மிக சுமுகமான முறையில் நடைபெற்று, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும், நாங்களும் கலந்து பேசியதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு என முடிவு செய்யப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.

தமிழகத்தில் 21 சட்டப்பேரவை இடைத்தேர்தல் குறித்து இதுவரை அறிவிப்பு வரவில்லை. நாடாளுமன்றத் தேர்தலோடு அதற்கான அறிவிப்பும் வரும் என நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்தியத் தேர்தல் ஆணையம் எந்தக் கட்சியின் முடிவுக்கும் பணியாமல் தனித்தன்மையுடன் செயல்பட வேண்டும். இது அரசியல் ரீதியாக உருவாக்கப்பட்ட அணி. மக்கள் நலனுக்காக, மாநில உரிமைகளுக்காக கடந்த 2 ஆண்டுகளாக தி.மு.க., தோழமைக் கட்சிகளுடன் இணைந்து போராடியிருக்கிறோம். நாடும் நமதே, நாடாளுமன்றமும் நமதே, நாற்பதும் நமதே", எனக் கூறினார். 

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, தி.மு.க., சார்பாக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர் இ.பெரியசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக துணைச் செயலாளர்கள் கே.சுப்பராயன், வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...