கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதி கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

கோவை : கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதி கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதி கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை சேர்ந்த வெள்ளிங்கிரியின் மகன் அருண்குமார் (35). இவர், துடியலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில், கோவை மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளார். 

இவர் சிறைக்கு வந்ததிலிருந்தே சக கைதிகளிடம் கூட பேசாமல் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று மதியம் 12.30 மணிக்கு கைதி அருண்குமார் ஷேவிங் செய்ய பயன்படும் லேஷர் பிளேடை கொண்டு கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 

இதையடுத்து, அருகில் இருந்த சிறைத்துறை காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் இருந்த கைதியை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 



தற்போது, கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிறைத் துறை மற்றும் பந்தய சாலை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...