கோவை : பாகிஸ்தான் பிடியில் இருந்து மீட்கப்பட்ட விமானி அபிநந்தனின் மருத்துவ அறிக்கை வெளிவந்த பிறகே, அவரை மீண்டும் பணியில் அமர்த்துவது பற்றி முடிவு செய்யப்படும் என இந்திய விமானப்படையின் முதன்மை தளபதி பிரேந்தர் சிங் தனாவ் தெரிவித்துள்ளார்.
கோவை : பாகிஸ்தான் பிடியில் இருந்து மீட்கப்பட்ட விமானி அபிநந்தனின் மருத்துவ அறிக்கை வெளிவந்த பிறகே, அவரை மீண்டும் பணியில் அமர்த்துவது பற்றி முடிவு செய்யப்படும் என இந்திய விமானப்படையின் முதன்மை தளபதி பிரேந்தர் சிங் தனாவ் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட சூலூர் விமானப்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- அபிநந்தனின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர் மீண்டும் விமானங்களை இயக்குவது தொடர்பாக தற்போது கருத்து தெரிவிக்க முடியாது. பாகல்கோட்டில் நடைபெற்ற தாக்குதலின் போது, நவீன ரக மிராஜ் வகை விமானங்களை பயன்படுத்தப்பட்டது. ஆனால், தாக்குதல் காலத்தில் எந்த விமானமாக இருந்தாலும், பயன்படுத்தப்பட வேண்டும் என்கிற அடிப்படையிலேயே மிக் 21 பைசன் ரக விமானத்தை அபிநந்தன் இயக்கியுள்ளார்.

மேலும், பைசன் ரக விமானம், அதிநவீன ரக ஆயுதங்களை தாங்கி செல்லவும், நவீன ரக ரேடார்கள் பொருத்தப்பட்டும், தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டது. இந்திய விமானப்படை பாகல்கோட் தாக்குதலின் போது, குறிப்பிட்ட இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது. இறந்தவர்கள் எண்ணிக்கை தொடர்பாக தாம் கருத்து கூற முடியாது. ஊடகங்களில் தாக்குதல் தொடர்பாக வரும் தகவல்கள் எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை.
தேஜஸ் விமானத்திற்கான தகுதிச்சான்று 2013-ல் கொடுக்கப்பட்டிருந்தாலும், தயாரிப்பு சான்று, இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் லிமிடெட் நிறுவனத்திற்கு டிசம்பர் மாதம் தான் வழங்கப்பட்டுள்ளது. 36 ரபேல் விமானங்கள், 40 தேஜஸ் ரக, இலகு ரக போர் விமானங்கள் ஆகியவை வரும் செப்டம்பர் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும். புதிய விமானங்களை சேர்க்கவும், பழைய ரக ஜாக்குவார், மிக் 21, மிராஜ் 2,000 ரக விமானங்கள் பயன்பாட்டில் இருந்து விலக்கப்படும்.
இந்திய விமானப்படையில் இணையும் பெண்களின் எண்ணிக்கை 13 சதவீதமாக உள்ளது. 13 ஆண்டுகள் பணி நிறைவிற்குப் பிறகு அவர்கள் விரும்பினால் பணி நீட்டிப்பு வழங்கப்படும், எனக் கூறினார்.
விமான விபத்துக்களை அதிகரித்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த இந்திய விமானப்படையின் முதன்மை தளபதி பிரேந்தர் சிங் தனாவ், விபத்துக்களை தவிர்க்க ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.