காணாமல் போன முகிலனை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை திராவிட தமிழர் கட்சி மனு

கோவை : சுமார் 20 நாட்களுக்கும் மேலாகக் காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடிக்க முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திராவிட தமிழர் கட்சி மனு அளித்துள்ளது.

கோவை : சுமார் 20 நாட்களுக்கும் மேலாகக் காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடிக்க முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திராவிட தமிழர் கட்சி மனு அளித்துள்ளது. 

இது தொடர்பாக திராவிட தமிழர் கட்சியின், மாவட்ட இளைஞரணி தலைவர் சு. மகேந்திரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதியில் இருந்து காணவில்லை. தூத்துக்குடி மாவட்டம், ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறையின் சட்டமீறலை ஆவணப் படமாக தயாரித்து வெளியிட்ட தோழர் காணாமல் போனது பல்வேறு விதமான அய்யபாடுகளை ஏற்படுத்துகிறது. 



முகிலன் காணாமல் போனது சம்மந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தும் முகிலன் வழக்கை சி.பி.சி.ஐ.டி.,யிடம் ஒப்படைத்தும், இதுவரை எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.



தமிழகத்தில் இயற்கை வளங்களைக் காப்பற்ற ஜனநாயக முறையில் செயல்படும் முகிலனை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனி கவனம் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...