கோடநாடு கொலை வழக்கு 18-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு : சயான், மனோஜ் உட்பட 5 பேருக்கு காவல் நீடிப்பு

நீலகிரி : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீலகிரி மாவட்ட நீதிமன்றம், சயான், மனோஜ் உட்பட 5 பேருக்கான காவலையும் நீட்டித்து உத்தரவிட்டது.

நீலகிரி : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீலகிரி மாவட்ட நீதிமன்றம், சயான், மனோஜ் உட்பட 5 பேருக்கான காவலையும் நீட்டித்து உத்தரவிட்டது. 

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜாமீனில் இருந்த நிலையில், சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் கோடநாடு கொலை சம்பவத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளது எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.



முதலமைச்சர் மீது அவதூறு தெரிவித்துள்ளதால், இருவரின் ஜாமீன் மனுவை ரத்து செய்யக்கோரி அரசு தரப்பில் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது. அப்போது, சயான் மற்றும் மனோஜ் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், இருவரின் ஜாமீனை ரத்து செய்த நீதிபதி பி.வடமலை, இருவரையும் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

 

இதையடுத்து, சயான் மற்றும் மனோஜ் தலைமறைவாகினர். இவர்களை பிடிக்க நீலகிரி மாவட்ட தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இருவரையும் கடந்த மாதம் 25-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், சயான் மற்றும் மனோஜ் இருவரும் சென்னை, மும்பை ஆகிய பகுதிகளில் நடமாடி வந்ததை போலீஸார் கண்காணித்து வந்தனர். பின்னர், நீலகிரி மாவட்ட தனிப்படை போலீஸார், நேற்று முன்தினம், சயான் மற்றும் மனோஜை கேரளாவில் வைத்து கைது செய்தனர். அவர்களை 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பி வடமலை உத்தரவிட்டார். 

இந்த நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி பி. வடமலை வழக்கை வரும் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும், சிறையில் இருந்தவர்களின் காவலையும் 18-ம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டார். இதன்பேரில், சயான், மனோஜ், மனோஜ்சாமி, பிஜின்குட்டி, தீபு ஆகியோரை போலீஸார் கோவை சிறைக்கு அழைத்து சென்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...