அமராவதி வனப்பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் மனிதனின் பாதி உடல் கண்டெடுப்பு : போலீசார் விசாரணை

திருப்பூர் : உடுமலை அருகே அமராவதி வனச்சரகத்தில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட மனிதனின் பாதி உடல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் : உடுமலை அருகே அமராவதி வனச்சரகத்தில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட மனிதனின் பாதி உடல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி வனச்சரகத்தில் சின்னாறு சோதனை சாவடி உள்ளது. நேற்று மாலை வனத்துறையினர் சோதனை சாவடி அருகே வனப்பகுதிக்குள் சென்ற போது, அந்தப் பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில், மனிதனின் பாதி உடல் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது தொடர்பாக அமராவதி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் எரிந்து கிடந்த பாதி உடல் மற்றும் ஒரு கால் பகுதியை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



மேலும், உடல் கிடந்த இடத்தில் எரிக்கப்பட்டதற்கான எந்த தடயங்களும் கிடைக்காததால், போலீசார் ஏமாற்றம் அடைந்தனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் உடல் எரிக்கப்பட்டிருக்கும் அழுகிய உடலை, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் சாப்பிட்டு இழுத்துக் கொண்டு வந்து இப்பகுதியில் போட்டிருக்கலாம் எனவும், எரித்துக் கொல்லப்பட்ட உடல் ஆணா..? பெண்ணா..? என மருத்துவ ஆய்விற்கு பிறகே தெரியவரும், என்றனர் போலீசார்.



வனப்பகுதிக்குள் சந்தனம், தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் மற்றும் யானை, சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளதாலும், சமூக விரோதிகள் வனப்பகுதிக்குள் இருப்பதைக் கண்டறிந்த வேட்டை தடுப்பு காவலர்கள் யாரையாவது கொலை செய்து எரித்துள்ளனரா..? அல்லது மலைவாழ் மக்கள் யாரையாவது எரித்துக் கொன்றுள்ளனரா..? அல்லது வெளியில் கொலை செய்யப்பட்டு வனப்பகுதிக்குள் கொண்டு வந்து எரித்து சென்றுள்ளனரா..? என பல்வேறு கோணங்களில் விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். 



எரிக்கப்பட்ட உடலைக் காணும் போது, 20 நாட்களுக்குள் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுவதால், இப்பகுதியில் கடந்த சில நாட்களில் யாராவது காணாமல் போய் விட்டார்களா..? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அமராவதி வனப்பகுதிக்குள் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கியோடு சமூக விரோதிகள் சுற்றித் திரியும் நிலையில், மனிதனின் எரிக்கப்பட்ட பாதி உடலால் வனத்துறையினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...