சூலூர் விமானப்படைத் தளத்தின் 5-வது பழுதுபார்க்கும் பிரிவுக்கும், ஹக்கிம்பேட்டை விமானப் படைப் பிரிவுக்கும் பிரசிடன்ட்ஸ் கலர்ஸ் விருது

கோவை : சூலூர் விமானப்படைத் தளத்தின் 5-வது பழுதுபார்க்கும் பிரிவுக்கும், ஹக்கிம்பேட்டை விமானப் படைப் பிரிவுக்கும் பிரசிடன்ட்ஸ் கலர்ஸ் விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார்.


கோவை : சூலூர் விமானப்படைத் தளத்தின் 5-வது பழுதுபார்க்கும் பிரிவுக்கும், ஹக்கிம்பேட்டை விமானப் படைப் பிரிவுக்கும் பிரசிடன்ட்ஸ் கலர்ஸ் விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார். 



இந்திய இராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவற்றில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக பணிபுரியும் அணிகளுக்கு குடியரசு தலைவரால் வழங்கப்படும் உயரிய விருதான நிஷாந்த் எனப்படும் பிரசிடன்ட்ஸ் கலர்ஸ் அவார்டு வழங்கப்படுவது வழக்கம். 



இதன் ஒரு பகுதியாக, சிறப்பான பழுதுபார்க்கும் சேவைக்காக, கோவை மாவட்டம் சூலூர் விமானப்படைத் தளத்தில் உள்ள 5-வது பழுதுபார்க்கும் பிரிவுக்கும், விமானிகளுக்கு சிறப்பான பயிற்சி அளிப்பதற்காக தெலங்கானாவில் உள்ள ஹக்கிம்பேட்டை விமானப் படைப் பிரிவுக்கும் இந்த விருதுகள் இன்று வழங்கப்பட்டது. இந்த விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.



முன்னதாக, இந்த விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரு படையணி வீரர்களிடன் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தலைமை விமான படை அதிகாரி பிரேந்திரா சிங் தனுவா, ஈசா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் எம்.ஐ 17, டோர்னியர், சாரங்க், தேஜஸ், ஏ.என் 32, அவுரவ் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளும் பாராகிளைடிங் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.



பின்னர், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வீரர்கள் மத்தியில் பேசினார். அப்போது, பேசியதாவது இந்த இரு அணிகளுக்கும் விருதுகள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். விமானப் படையில் இரு அணிகளும் சிறப்பான சேவை புரிந்து இருக்கின்றது. 



கடந்த 1975-ம் ஆண்டு நடந்த போரில் ஹக்கிம்பேட்டை படைப்பிரிவு சிறப்பாக செயல்பட்டது. ஹக்கிம்பேட்டை விமானப் படை தளத்தில் 1975-ம் ஆண்டு முதல் ஹெலிகாப்டரில் பெண் பைலட்டுகளுக்கும், 2016 போர் விமானங்களிலும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.



இந்தியா அமைதியை விரும்பினாலும், தேவைப்படும் சமயத்தில் முப்படைகளும் தயார் நிலையில் உள்ளது. இந்திய விமானப்படை உறுதியாக இருக்கின்றது. தேவைப்படும் போது இந்திய விமானப் படை உபயோகப்படுத்தப்படும். சூழ்நிலை வரும் போது,அதற்கு தகுந்தபடி இந்திய விமானப் படை செயல்படும். விமானப் படையில் இரு அணிகளும் சிறப்பான சேவை புரிந்து இருக்கின்றது. 



சமீபத்தில் எல்லையில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் நமது விமானப்படை வீரமாகவும், சிறப்பாகவும் செயல்பட்டது. பேரிடர் ஏற்பட்ட சமயங்களில் விமானப்படையின் பணி மகத்தானது. இந்திய விமானப் படை நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. சூலூர் 5 பேஸ் ரிப்பேர் டிப்போ தனது பணியை சிறப்பாக செய்து வருகிறது, என்றார்.



இதனைத்தொடர்ந்து, இரு அணிகளின் 25 ஆண்டுகால சாதனைகள் குறித்த கையேட்டை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார். பின்னர், விமான படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளையும், விமான சாகச நிகழ்ச்சிகளையும் குடியரசு தலைவர் பார்வையிட்டார்.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...