கோவை : ஈஷா மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கோவை வந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை விமானநிலையத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வரவேற்றார்.

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மஹாசிவராத்திரி விழாவானது நாளை மாலை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவானது மாலை 6 மணிக்கு தொடங்கி, மறுநாள் காலை 6 மணி வரை மிக கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதையொட்டி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மாலை கோவை வந்தார். அவரை கோவை விமானநிலையத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், அவர் பந்தயசாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார்.
நாளை காலை கார் மூலம் சூலூர் விமானப் படை தளத்தில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு சிறந்த சேவைக்கான விருதுகளை வழங்குகிறார். பின்னர், மீண்டும் விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்து விட்டு மாலை மீண்டும் விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையத்துக்கு செல்கிறார். அங்கு மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்கும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இரவு கோவை திரும்பி அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். பின்னர், செவ்வாய்கிழமை காலை விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
இந்த நிலையில், குடியரசு தலைவர் கோவை வருவதையொட்டி, மாவட்டத்தில் மாநகர் மற்றும் மாவட்ட போலீஸார் என மொத்தம் 5,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விமான நிலையம், அரசு விருந்தினர் மாளிகை, சூலூர் விமானப்படை தளம், குடியரசு தலைவர் கார் செல்லும் வழித்தடங்கள் என அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. குடியரசு தலைவர் பயணிப்பதற்காக குண்டு துளைக்காத கார் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.