கோவை : நாளை மாலை ஈஷா யோகா மையத்தில் நடக்கவிருக்கும் மகாசிவராத்திரி விழாவிற்கு மேதகு குடியரசுத் தலைவர் அவர்கள் பங்கேற்க உள்ளதால், கோவையில் இருந்து சிறுவாணி ரோடு வழியாக பேரூர், மாதம்பட்டி ,ஆலந்துறை வழியாக ஈசா யோகா விற்கு செல்லும் பொதுமக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மாற்றுப்பாதையில் நாளை மாலை 6 மணி முதல் செல்லுமாறு 8:30 மணி வரை செல்லுமாறு காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாற்றுப்பாதைகள் :
மேட்டுப்பாளையம் சாலை வழியாக வரும் பொதுமக்கள் அவினாசிலிங்கம் கல்லூரி சந்திப்பு, ஜி.சி.டி கல்லூரி சந்திப்பு, லாலி ரோடு சந்திப்பு, பி.என்.புதூர், வடவள்ளி, போளுவாம்பட்டி, தொண்டாமுத்தூர் வழியாக ஈஷாவிற்கு செல்லலாம்.
அதேபோல அவிநாசி சாலை வழியாக வரும் பொதுமக்கள் அவினாசி சாலை மேம்பாலம், ப்ரூக்ஃபீல்ட்ஸ் சாலை, கௌலி பிரவுன் சாலை, லாலி ரோடு என வடவள்ளி வழியாக செல்லலாம்.
அதேபோல பாலக்காடு சாலை வழியாக வரும் பொதுமக்கள் கோவைப்புதூர் பிரிவு, சுண்டக்காமுத்தூர், பச்சாபாளையம், மாதம்பட்டி வழியாக செல்லலாம்.
பொள்ளாச்சி சாலை வழியாக வரும் பொதுமக்கள் கற்பகம் கல்லூரி, எல் அண்ட் டி பைபாஸ், மதுக்கரை மார்க்கெட் ரோடு, கோவைபுதூர் பிரிவு, சுண்டக்காமுத்தூர், பச்சாபாளையம், என மாதம்பட்டி வழியாக செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் வழிகள் அனைத்தும் வழக்கம்போல செயல்படும் ஆகவே பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.