கோவை : மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பருவமழை பொய்த்ததால் வனம் சார்ந்த பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் நடப்பட்ட மரக்கன்றுகளை காக்க வனத்துறையினர் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

இவ்வாண்டு பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை 50 சதவிகிதம் வரை குறைந்து போனதால், கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை மற்றும் காரமடை வனச்சரக பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், காடுகளில் உள்ள இயற்கையான நீராதாரங்கள் பெரும்பாலும் வற்றி விட்டதோடு, செடி கொடிகளும் காய்ந்து கருகி வருகின்றன.
இதனால், காட்டுத்தீ பரவல் தடுப்பு மற்றும் வன உயிரினங்களுக்கான தண்ணீர் தேவையினை பூர்த்தி செய்வது என பல்வேறு நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், எதிர்பார்த்த மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால் வனத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட காடு வளர்ப்பு திட்டம் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறது. குறைந்து வரும் வனப்பரப்பை ஓரளவேனும் ஈடுசெய்யும் வகையில், வனத்தையொட்டி செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ் நடப்பட்ட பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகள் நீரின்றி வாடி வருகின்றன.
சிறுமுகை வனச்சரக பகுதிக்குட்பட்ட சென்னாமலை கரடு பகுதியில் வனத்துறை சர்ர்பில் கடந்தாண்டு காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் 28,000 மரக்கன்றுகள் நடப்பட்ட நிலையில், இவையனைத்தும் கருகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு இம்மரக்கன்றுகளை வறட்சியின் பிடியில் இருந்து காக்க வனத்துறை முயற்சி எடுத்து வருகிறது.

இயற்கையான மழைப்பொழிவு கிடைக்காத காரணத்தினால், செயற்கையாக தண்ணீர் பாய்ச்சும் பணியில் வனத்துறை இறங்கியுள்ளது. மலை முகட்டில் ஓடும் பவானியாற்று நீரை மோட்டார்களின் உதவியுடன் நீண்ட குழாய்கள் மூலம் கொண்டு வந்து மரக்கன்றுகளுக்கு பாய்ச்சி வருகின்றனர். இதற்கென வனத்துறை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு கருகி வரும் மரக்கன்றுகளை காக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது ஒரு தற்காலிக தீர்வே என்றும்,கோடை மழை பெய்தால் மட்டுமே வறட்சி பாதிப்பு குறையும் என்கின்றனர் வனத்துறையினர்.