திருப்பூர் : திருப்பூரின் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள், இணைப்பு சாலைகள் அமைக்க மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நித்தின் கட்கரியிடம் எம்.பி. சத்யபாமாவின் வலியுறுத்தியதின் பேரில், இதற்கான அறிக்கையை சமர்பிக்க தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம், சாலைகள் திட்டக் குழு தலைவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எம்.பி., சத்தியபாமாவின் தொடர் முயற்சியால் சம்மந்தப்பட்ட மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடமும், மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் மாண்புமிகு நித்தின் கட்கரி அவர்களிடம் நேரில் வலியுறுத்தியும் கோரிக்கை வைக்கப்பட்டது.
திருப்பூர் எம்.பி., சத்தியபாமா கடிதத்தில் கூறியதாவது:- திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை அதிகார அமைப்பின் கீழ் உள்ள, லஷ்மி நகர் (பவானி) முதல் செங்கப்பள்ளி வரை 43 கி.மீட்டரில் 300-க்கும் மேலான மிகமோசமான சாலை விபத்துக்கள் நடந்துள்ளது. ஏழை மற்றும் விவசாய குடும்பங்களைப் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலையால், NHAI- 47-இல் கீழ்கண்ட இணைப்பு சாலை மற்றும் மேம்பாலங்கள் அத்தியாவசியம் என்று திருப்பூர் எம்.பி சத்தியபாமா மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சரை உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதியும், கடந்த பிப்ரவரி 12-ம் தேதியும் நேரில் சந்தித்து வலியுறுத்தப்பட்டது.
(1) பெருந்துறை – காஞ்சிக்கோவில் – கோவிந்தப்பாடி குறுக்குச் சாலையில் 78/400 கிலோ மீட்டரில் மேம்பாலம்
(2) பெருந்துறை – துடுப்பதி – மாக்கினம் கோம்பை குறுக்குச் சாலையில் 80/800 கிலோ மீட்டரில் மேம்பாலம்
(3) கொளத்துப்பாளையம் – விஜயமங்கலம் குறுக்குச் சாலையில் 89/100 கிலோ மீட்டரில் சாலை மேம்பாலம்
மற்றும்
(4) பெருந்துறை – பெத்தம்பாளையம் – காஞ்சிக்கோவில் குறுக்குச் சாலையில் 79/400 கிலோமீட்டரில் மேம்பாலம்.
மேற்குறிப்பிட்ட இடங்களில் ஏழை மற்றும் விவசாயக் குடும்பங்களைப் பாதுகாக்கும் வகையில், மேம்பாலங்களை உடனடியாகக் கட்டித்தர நடவடிக்கை எடுக்க அமைச்சரை வலியுறுத்தினார்.
மேலும், மிகவும் முக்கிய பிரச்சனையாக தற்போது இருக்கக்கூடியது விஜயமங்கலம் சுங்கச்சாவடி 88/100 பகுதிதான். ஏனெனில், இரு பக்கங்களிலும் சுங்கச்சாவடி செயல்பட்டு வருவதால், அதன் குறுக்கே பொதுமக்கள் கடந்து செல்வதற்காக வாகன பாதை எதுவும் அமைக்கப்படாமல் அதன் கட்டமைப்பு உள்ளது. அதனால், இருசக்கரம் மற்றும் அத்தியாவசிய வாகனங்கள் செல்வதை கருத்தில் கொண்டு விஜயமங்கலம் பகுதி சுங்கச்சாவடியின் குறுக்கே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, சுரங்கப்பாதை அமைத்து விரைவில் செயல்படுத்திட வேண்டும்,இவ்வாறு கடந்த ஆண்டு ஜுன் மாதம் 6-ம் தேதி அளித்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தினார்.
திருப்பூர் எம்.பி., சத்தியபாமா மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளின் பலனாக, மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதின் பேரில், ‘தேசிய நெடுஞ்சாலை துறை’ (NHAI), பெருந்துறை – காஞ்சிக்கோவில் – கோவிந்தப்பாடி, கொளத்துப்பாளையம் – விஜயமங்கலம் , பெருந்துறை – துடுப்பதி, மாக்கினம் கோம்பை ஆகிய இடங்களில் தரைப்பாலம் அமைக்கவும், பெருந்துறை – பெத்தம்பாளையம் – காஞ்சிக்கோவில் ஆகிய இடங்களுக்கு இணைப்பு சாலைகள் அமைக்க, NHAI விரிவாக்கம், சாலைகள் திட்டக் குழு தலைவர் K & J புராஜேக்ட்ஸிக்கு திட்டப் பணிகளுக்கான அறிக்கைகள் சமர்பிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.