கோவை : பூமார்க்கெட் அருகே தி.மு.க., சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் நூலகத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அவரது வருகையால், பூமார்க்கெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோவை : பூமார்க்கெட் அருகே தி.மு.க., சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் நூலகத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அவரது வருகையால், பூமார்க்கெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோவை பூமார்க்கெட் தெப்பக்குளம் மைதானம் பகுதியில் உள்ள திராவிட கழக அலுவகத்தில் கலைஞர் நூலகம் திறப்பு விழா இன்று இரவு 7.40 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக வந்த உதயநிதி ஸ்டாலின் தெப்பக்குளம் மைதானம் பகுதியில் புதிதாக அமைக்கபட்டிருந்த தி.மு.க., கொடியை ஏற்றிவைத்தார்.

பின்னர், அலுவலகத்தில் உள்ள கலைஞர் நூலகத்தை திறந்து வைத்தார். இதையடுத்து, தெப்பக்குளம் பகுதியில் அமைக்கபட்டிருந்த மேடையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சி மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின்: "நூலகத்தை திறந்து வைக்கத் தான் வந்தேன் என நினைத்தேன், ஆனால் போருக்கு வந்தது போல் உணர்வு! அந்தளவிற்கு கூட்டமாக வந்து அன்பு செலுத்தியவர்களுக்கு நன்றி. அன்பால் அடிப்பதை கேள்வி பட்டுயிருக்கேன் இன்று தான் அதை உணர்ந்தேன். மாலை, சால்வை வேண்டாம்... புத்தகங்கள் கொடுங்கள். எனக்கு கிடைக்கும் புத்தகங்களையும் இந்த நூலகத்துக்கு அனுப்பி வைப்பேன்" என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர். இதனால், அவினாசி மேம்பாலம், மரக்கடை, பூமார்க்கெட் போன்ற பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது.மேலும், இந்த பகுதிகளில் போக்குவரத்தை சரி செய்ய காவல்துறையினர் யாரும் இல்லாததால், இந்த நெரிசலானது சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மேலும், வழக்கமாக போக்குவரத்தை சரி செய்யும் காவல்துறையினர் யாரும் இந்த பூமார்க்கெட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இல்லாததால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.